Showing posts with label சுங்கச்சாவடி. Show all posts
Showing posts with label சுங்கச்சாவடி. Show all posts

Saturday, 6 September 2014

புறவழிச்சாலை - 1

இரை விழுங்கியபின்
செமித்தலுக்காக
நீண்டு படுத்திருக்கும்
மலைப்பாம்பின் மேல்
சிதறிக்கிடக்கும்
மாமிச துண்டுகளை
பிணவண்டுகள் புசிக்க.

நிலம் பல விழுங்கி
நீண்டு கிடக்கிறது
புறவழிச்சாலை.
வாகனங்கள்
வெறிகொண்டு
வேகம் கொள்கின்றன
பிழைத்தல் வேண்டி.

இரை செல்லச்செல்ல
பெருத்து சுருங்கிற்று பாம்பு.
வெறிகொண்டு
ஊர்ந்து சென்ற
பிணவண்டுகள்
அசைவுணர்ந்து
திடீரென நிற்கின்றன.

ஓ!
சுங்கச்சாவடி!