Showing posts with label துப்புரவு. Show all posts
Showing posts with label துப்புரவு. Show all posts

Tuesday, 29 November 2011

இன்னும் அசுத்தமாய் நான்


முன்பொறு தினம்
என் செய்கையால்!.
சுத்தம் ஆயிற்று வீடு,
இன்னும் அசுத்தமாய்..
நான்.


சீராகத்தான் சென்றது
சாக்கடை நீளமாய்..
அன்று
தேங்கி நின்றது
குப்பை கழிவும், நீருமாய்.

எங்கோ
எதிலோ அடைப்பு
எனக்கும் தெரியாது
அடைப்பு எடுப்பு.

ஒரே நாற்றம்! ஒரே நாற்றம்!
இறங்கவில்லை உணவு
யார்க்கும்!!!
பெரும் குற்றம்! குற்றம்!
பொறுமையுமில்லை
அண்டை
அருகார்க்கும்..

வந்தார் நல்லார்,
துப்புரவு தொழிலாளி.
நாறும் அடைப்பை
எடுத்தார் வல்லார்.

ஒன்று....
ஒரு சொம்பு-ல தண்ணி
கொடு சாமி! குடிக்க!
தீண்டும் துன்பம்
எனக்கெதற்கு?
குழாய திற! தண்ணி வரும்

இரண்டு....
கொடுத்தேன் கூலியை
எட்டி நின்றே
அவர்மேல் கைபடாது
அவரிடம்.

சுத்தம் ஆயிற்று வீடு.
இன்னும் அசுத்தமாய்,
நான்.