Showing posts with label வளர்மதி. Show all posts
Showing posts with label வளர்மதி. Show all posts

Tuesday, 25 July 2017

நாங்க குண்டர்கள்தான்

//வளர்மதி மற்றும் திவ்யபாரதிக்காக//

ஆமா!
நாங்க குண்டர்கள்தான்!
ஆமா!
நாங்க குண்டர்கள்தான்!

நீ மங்குனியா இருந்தாக்கா
நாங்க எப்பவுமே குண்டர்கள்தான்.
நீ கொள்ளையடிக்க வந்துருந்தா
அப்பவும் நாங்க குண்டர்கள்தான்.

துண்டு பிரசுரம் நான் கொடுத்தா
துப்பாக்கிய வச்சு நீ சுடுவ!
மக்களுக்காக நான் நின்னா
அட மங்குனி!
உனக்கென்ன பொச்செரிச்சல்.
துப்பில்லாத உனக்கெதுக்கு?
துப்புகெட்ட அதிகாரம்.
வக்கில்லாத உனக்கெதுக்கு.
வக்கனையா வெள்ளை வேட்டி?

பல்கலையில நான் படிச்சா
படியிரங்க கூடாதா?
அடக் கூறுகெட்ட கூமுட்டை
மாணவர்கள் போராடி ஜெயிச்சதுதான்
நீ குளிர்காயுற அதிகாரம்.

இன்னொருத்தன்
போராடி பெற்ற பயனால
குந்திக்கினு பேசுறான்
ஒரு பூர்ஷ்வா போலீசு!
”படிக்கிற வயசுல
போராட்டம் என்னத்துக்கு?” -னு
கேக்குது அந்த லூசு!

தர்மபுரி பஸ்ஸை கொளுத்திட்டு
விவாதத்துக்கு வந்தான் அரசியல்வாதி
அவுத்து வுடுறான் தத்துவத்தை..
நோட்டு புக் கொடுக்காட்டிதான்
போராடனுமாம்..
நோக்கத்துக்கு போராடக்கூடாதாம்..
அடிமைப்பய! அடிமைப்பைய!

வெறும் சல்லிகட்டுக்கே
சல்லியெடுத்தோம்!
இந்த சல்லிப்பய அரசாங்கத்துக்கா
வளைஞ்சு கொடுப்போம்.

8 மணிநேர வேலைக்காக
போராடுனது பொண்ணுங்கதான்.
இந்த எடுபுடி எடப்பாடிய
புரட்டிடுவோம் சாக்கிரதை…
 
வளர்மதிய கைது செஞ்சா?
நூறு திவ்ய பாரதி இருக்காங்க.
அவங்களையும் கைது செஞ்சா?
ஆயிரம், லட்சமா பெறுகிடுவோம்
சாக்கிரதை.

படமெடுத்து ஆடுனாலும்
பயமில்லை..
கக்கூஸ் படமெடுத்தோம்..
உன் கக்கூசையும் படமெடுப்போம்..
சாக்கிரதை! சாக்கிரதை!


-தம்பி பிரபு

25/07/2017