Showing posts with label பிக்பாஸ். Show all posts
Showing posts with label பிக்பாஸ். Show all posts

Tuesday, 25 July 2017

பிக் பாஸின் பிக் கேர்ள் - ஓவியா

பட்டாம்பூச்சி தனக்கு பிடித்த
பாடலுக்கு
எப்பொழுதும் ஒரு நடனத்தை
கைவசம் வைத்துகொண்டு
ஆடிக்கோண்டே இருக்கிறதென!
அந்த முட்டாள் கவிஞனுக்கு அல்ல..
நம்மைப்போன்ற கவிஞர்களுக்கு
மட்டுமே தெரியும்.

பட்டாம்பூச்சி போல
பறக்கிறாய்!
வண்ணமயமானவள் நீ!.
எப்பொழுதும் தோகை விரித்து
படபடத்துகொண்டே இருக்கிறாய்.

உன்னை கொண்டாடும்
அனைவருக்கும்
கவிதை போல மனமுண்டு.
எனக்கும் எண்ணற்றோர்க்கும்.

உன் மனம்
மட்டுமல்ல,
நீயே ஒரு ஓவியம் – என
ஓவியர்களும் இப்போது
உன்னை மெச்சுகின்றனர்.
உன்னை இரசிக்கிற ஒவ்வொருவனும்
ஓவியன்தானே ஓவியா!

அன்பை கொட்டவும்,
அரட்டை பேசவும்
ஆளில்லையென
விசனப்படாதே!
அழாதே!

இதோ!
தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிற
ஒவ்வொரு வீட்டிலும்
நான்கு பேர் உன்னோடு
அளவளாவ ஆவலாய்
உள்ளார்கள்.

ஹக் செய்ய ஆவலாய்..
மீனுகுட்டி இருக்கிறாள்..
காமாட்சி பாட்டி
முத்தங்களோடு காத்திருக்கிறாள்.

டாஸ்க் தோழியை காறித் துப்பு.!
இன்று
தமிழகமெங்கும் தோழிகள் உனக்கு.

மருமகளாக்கிக் கொள்ள
அம்மாக்களும்,
மணமகளாக்கிக் கொள்ள
மாப்பிள்ளைகளும்…
உனக்காக தவம் கிடக்கிறார்கள்..

நீ அழாதே செல்லம்.
எழுந்து வா!
எங்களோடு ஆடு!

”பிக் பாஸ்!
ஒரு நல்ல சாங் ப்ளே பண்ணுங்க! ப்ளீஸ்!
நாங்க ஆடனும்.

-தம்பி பிரபு

25.07.2017