Showing posts with label டான் அசோக். Show all posts
Showing posts with label டான் அசோக். Show all posts

Monday, 3 April 2017

சிசிலியன் அவன்

அழகிலும் ஆளுமையிலும்
சிசிலியன் இவன்!
முகநூல் நிழலுலகத்தின்
மிக்கேல் கர்லொன்!

ஆம்!
மிக்கேல் கர்லோனின்
துப்பாக்கியைப் போல
இவன் தட்டச்சுப் பலகை
பொறி தட்டும்.
அதில்
எப்போதாவதுதான்
ஜெர்மானிய(ஆரிய)
தலை தப்பும்.

ரோமானியனை போல
நண்பர்கள் கூட்டம்.
பாரீஸ்காரனை போல்
காதலில் நாட்டம்.

அரிஸ்டாட்டில் போல்
அரசியல் அலசுவான்.
நீட்சேவை போல்
நாத்திகம் பேசுவான்.

ஸ்பீல் பெர்கின்
ஐஸ் பெர்க் இவன்.
சுத்த சினிமாக்காரன்.!


கீழை நாட்டு சாக்ரடீஸீன்
வாரிசு.
தென்னாட்டு காந்தியின்
மனப்பிராந்தி.
இவன் மிக்கேல் எனில்,
இவனுக்கு காட்ஃபாதர்
யார்?
ஹா! ஹா! ஹா!
வேறு யார்?
கலைஞர்தான்.

அது சரி!
யார் இவன்?

டான் அசோக் என்ற
இளவரசன் என்ற
கிளிமூக்கன் என்ற
அரக்கன் என்ற
Ashok R என்ற
அவன்தான் இவன்.

15 மார்ச்சு 2017 don ashok பிறந்தநாள் வாழ்த்து கவிதை