Showing posts with label டைட்டானிக். Show all posts
Showing posts with label டைட்டானிக். Show all posts

Sunday, 2 September 2012

நேர்மை


நான் 1988ல் 5ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபொழுது ஒருநாள் காலை நானும் என் தம்பியும் பள்ளிக்குள் சென்றோம்.சைக்கிள் ஸ்டாண்ட் அருகில் மூன்று 100 ரூபாய் நோட்டுக்கள் கீழே கிடப்பதை கண்டோம். 
நான் அவைகளை கையில் எடுத்தேன்.என்னை சூழ்ந்த 10வது, 12வது படிக்கும் பெரிய பையன்கள் “ Boy! Give those to us. We will handle them to Shirley Mam”  கண்டிப்புடன் கூறினர். அதில் ஒருத்தன் “ No. friends. Boy! you too come with us and you yourself give it to Shirley Mam.” என்றான். 

நானும் உடன் சென்றேன். ஒரு வாரம் முன்புதான் நாயேஎன என் நண்பனை தமிழில் திட்டியதற்காக ஷ்ர்லி மேம்-டம் திட்டு வங்கியிருந்தேன்.அந்த பையனுடன் சென்று ஷர்லி மேமி-டம் பணத்தை கொடுத்தேன்.என்னை ஷர்லி மேடமும் மற்றோரும் பாராட்டி அனுப்பினார். 

அடுத்து வந்த திங்கள் கிழமை ASSEMBLY-ல் அனைவர் முன்னிலையில் என்னை அழைத்து ஒரு பரிசும் கொடுத்தனர். மகிழ்ச்சியில் அப்பரிசை எடுத்துகொண்டு வருகையில் வீட்டு வாசற்படியில் விழுந்து அப்பரிசின் உள்ளே இருந்த வெள்ளித் தாம்பாளம் நெளிந்தது.

 இதுபோல் நிறைய நிகழ்வுகள் உண்டு. நிற்க..

மூன்று மாதம் முன்பு புதிதாக ஒரு 4GB PENDRIVE வாங்கினேன். 15 நாளில் அதனை தொலைத்துவிட்டேன்.எங்கு தொலைத்தேன் என்ற ஞாபகமும் இல்லை.. நானும் தொலைத்ததை மறந்தும் விட்டேன்.

நேற்று முன்தினம் இரவு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
“ஹலோ! சார் நான் கணேஷ் பேசுறேன். நீங்க சமீபத்துல  படிப்பு சம்பந்தமா எதையாவது தொலைச்சீங்களா?எனக் கேட்டார்.

இல்லையே!என்றேன்.

”நீங்க பிரபுதானே?” -கேட்டார்

”ஆமாம்!ஏன்?” - என்று குழம்பினேன்.

இல்ல சார்.என்கிட்ட ஒரு பென்டிரைவ் இருக்குது.விகாசா ஸ்கூல் பக்கத்துல கிடந்தது....எனச் சொல்லி முடிப்பதற்குள்.

அது! என்னோடதுதான் சார்... சில்வர் கலர், HP 4GB பெண்டிரைவ்.. என்றேன் நான்.

இப்பதான் எதுவும் தொலைக்கலைனு சொன்னீங்க.. பெண்டிரைவ்னு சொன்னதும், உங்களோடதுன்னு சொல்றீங்க??

”இல்லைங்க.. நான் பெண்டிரைவ் தொலைச்சு 3 மாசமிருக்கும்”

இதை எடுத்து 20 நாள் இருக்கும் சார்..சில்வர் கலர்தான், HPதான். உங்களோடதுன்னு நேத்து என் சிஸ்ட்த்துல போட்டு பாத்ததுனால தெரிஞ்சது சார்என்று சொல்லி “SORRY சார் என்றார்.

இல்லை சார். நான் தொலைச்சு கண்டிப்பா 3மாசம் இருக்கு சார்... ஏன் சார்? உங்க்கிட்ட சிஸ்டம் இருக்கு.. நீங்களே வச்சுகிடலாம்லஎன்றேன் .

அது உங்களோடதுதான சார். நான் எப்படி வச்சுக்க முடியும். சரிங்க சார்.வந்து வாங்கிகிறீங்களா?எனக் கேட்டார்.

நாளைக்கு வர்றேன் சார்என்ற நான் அடுத்த நாள் காலை மறந்துவிட்டேன்.

மாலை 4 மணியளவில் மறுபடியும் அழைத்தார் அவர். “சார். வர்றீங்களா?

அவரை சந்திக்க விரைந்தேன்..
ஹால்டிராம்ஸ் சோன்பப்படி வாங்கிகொண்டு அவரை போய் சந்தித்தேன்..
கணேஷை பார்த்ததும் தெரிந்தது அவர் நேர்மையானவராக இருப்பவர் என. முகத்தில் அவ்வளவு அப்பாவித்தனம்.
சார் இதை தொலைச்சு 3 மாசமாச்சு சார்.. ஒருவேளை! நீங்க எடுக்கிறதுக்கு முன்னாடி வேற யாராவது எடுத்திருப்பாங்களோ? என கிண்டலாக கேட்டேன்.,  
இருக்கலாம் சார்என சிரித்தார். பென்டிரை-வை வாங்கிகொண்டு வீடு வந்தேன்.
எனது லேப்டாப்பில் போட்டு பார்த்தேன். உள்ளே நிறைய சினிமா பாடல்கள், சாமி படங்கள்.
அட! உண்மையிலேயே கனேஷுக்கு முன்னர் யாரோ இதனை எடுத்து பயன்படுத்தியுள்ளனர் என உறுதியானது. கணேஷிடம் அழைத்து விவரத்தை சொன்னேன். 
சந்தோஷப்பட்டார். ”சார்! சோன்பப்படி நல்லா இருந்தது சார்” என்றார்.

Tuesday, 14 August 2012

டைட்டானிக் தமிழ்

TITANIC படத்தை மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் நானும் நன்பர்களும் சேர்ந்து முதல் நாள் முதல் காட்சி பார்த்தோம்.

ஒரு வாரம் கழித்து அந்நண்பர்களில் ஒருவனான முத்துவிடம் நான் பேசிகொண்டிருந்தபொழுது...அவன் கீழ்கண்டவாறு சொன்னான்......

“ டே,மாப்ள! அவள அன்னைக்கு 14B-ல பாத்தேனா... TITANIC-க்கா இருந்தாடா!..பாத்துட்டேருக்கேன்
.... பஸ் எடுத்துட்டான்.... நான் விரட்டிகிட்டு போய் சும்மா TITANIC-க்கா பஸ்ல தொத்திகிட்டே போறேன்..அவ என்ன பாக்கவே இல்லை..
சரி இறங்கி பேசுவோம்னு பாத்தா தக்காளி அவங்கப்பன் ஸ்டாப்ல TITANIC-க்கா நிக்கிறான்..? நான் கடுப்பாயிட்டேன்"
இதேபோல் அவன் JUMANJI பார்த்தபோதும் பேசியுள்ளான்.