Showing posts with label சுதந்திரம். Show all posts
Showing posts with label சுதந்திரம். Show all posts

Tuesday, 14 August 2012

சுதந்திரம்

1984ல் பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை வெளிவந்தது.
அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் சுத்ந்திரம்.சரிதாவின் தம்பியாக வரும் உடல் வளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளி அவர்.

படத்தில் பாதிவரை காட்டப்படாத அவர் கதையின் ஊடே வெளியூரிலிருந்து வருவது போல் எடுத்திருப்பார் பாலசந்தர். எல்லோரும் எதிர்பார்த்து காத்திருப்பர் அவர் வருகையை.

வந்துவிடுவார்..பார்த்தால் குள்ளமாய் இருப்பார். அப்போது...

”ஏம்பா! சுதந்திரம் வந்திட்டியா? என்னப்பா நீயும் இன்னும் வளரலியா?
35 வருசமாச்சு சுதந்திரம் கிடைச்சு! அதுவும் உன்னைப்போலத்தான்.இன்னும் வளரல.?”

இன்றளவும் இதே உரையாடல் நினைவுக்கு வருகிறது.
சுதந்திர தின வாழ்த்துகள்