ஊர்க்குருவிகள்
ஊர்க்குருவிகள் நாங்கள்
உயர பறந்தும்,
பருந்து பட்டம்
எங்களுக்கில்லை.
பசும் புற்கள் நாங்கள்
உய்ரமாய்
வளர மட்டும்
அனுமதியில்லை.
உடைந்தாலும்
யாருக்கும்
கவலையில்லை.
எங்களுக்கு ஒதுக்கீடு
உண்டு.
ஒதுக்கி வைத்தலும்
உண்டு.
ஓத்துக்கொள்ளுதல் மட்டும்
என்றென்றும்
இல்லை.
No comments:
Post a Comment