தூரப்போ!...உழைச்சு சாப்பிடு”
பொருமும் அந்த
லேப்டாப் பைக்காரன்.
பேரிலோ பிச்சைக்காரி
சூடியிருப்பது
ஆண் சட்டையை.
பாவடையிலோ
பார்க்கும் கண்கள் ஊடுருவி
மானம் போகிறது-கிழிசல்.
கக்கத்தில் கைகுழந்தை,
வாடகைப்பாசம்.
அழகில்லை பருவத்திலே
ஆகாய கோட்டை கட்ட
வக்கில்லை.
கையேந்துகிறாள் காசுக்கு.
முகத்துக்கு நேரே
ஏந்தியதால்
முறைக்கிறான்
லேப்டாப் பைக்காரன்.
எல்லோரிடத்தும்
ஒரே ஒப்பாரி!
“சாப்டு நாளாச்சு!
பிள்ளைக்கு பாலுக்கு!
அய்யா தர்ம்ம் செய்யி!....”
இப்போது என் முறை!
சட்டைப்பையில் தேடுகிறேன்
சங்கடத்தோடு நெளிகிறேன்..
கிடைக்கிறது எட்டணா!
போடுவதா? வேண்டாமா?
கூடுதலாய் இறக்கம்,
குழந்தையின்மேல் கருணை
”இந்தாம்மா....? வச்சுக்கோ...!”
வாங்கிய எட்டணாவை
எட்டாது முறைத்துவிட்டு,
செல்லாத பார்வை பார்த்து
தூரமாய் வீசும் கோபம்!
அவளுக்கும் வருகிறது.
லேப்டாப் பைக்காரன்
என்னை நோக்கினான்,
சீ......! என்பது போல.....!
No comments:
Post a Comment