Thursday 4 July 2013

மரணத்திற்கு உன் சாதி பதில் சொல்லுமா? த்தூ.... தமிழ்நாடே!


இது நம் சமூகத்தின் சாபக்கேடு. சாதியின் கொடுந்தீ! த்தூவென.. தூற்றுவோம் இச்சமூகத்தை.
 
கடந்த 6 மாத காலமாக ”எது உயர்ந்த சாதி?” என்ற மனித குலத்தின் மிக உன்னதமான 
கேள்விக்கு வடிகாலாய் தம்பி இளவரசனின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது.
தான் உயிராய் நேசித்த பெண்ணை திருமணம் செய்வதென்பது பெருங்குற்றமென இச்சமூகம் அங்கீகரிக்கையில், ”நீ இந்த சாதி. நீ காதலித்தால் அது வெறும் நாடகக் காதல்தான்” என பெருங்கூட்டமாய் நின்று ஆதிக்க கூட்டம் எள்ளி சிரிக்கையில், பாவம் அவன் அவனை நிரூபிக்கிற கட்டாயத்தில் இன்று தற்கொலை செய்துவிட்டான்.

நேற்றுக்கூட நம்பிக்கை வெள்ளத்தின் கடைசித் துளியாய்  ’திவ்யா நமக்காக திரும்ப கிடைப்பாள்’ என்றும், ’என்றாவது ஒருநாள் சேர்ந்து வாழலாம்’ என்றும் இருந்த இளவரசன் காதுகளில் திவ்யா கோர்ட்டில் சொன்னது இன்னும் துக்கத்தை உண்டு பண்ணியிருக்கும். இப்பாழும் சமூகத்தின் மத்தியில் தன் காதலை புரிய வைப்பது கடினம் என முடிவெடுத்து தன் உயிரை மாய்த்து கொண்டான் இறுதியாக.

இதை சாதாரணமாய் நோக்கும் நம் சாமான்யர்கள்  “இந்த பொம்பளை பிள்ளைங்களே இப்படித்தான், காதலிச்சுட்டு ஏமாத்திரும்ங்க” என திவ்யா மேல் ஒட்டுமொத்த பழியை போடக் கூடும். இது திவ்யா சுயமாக எடுத்த முடிவல்ல என்பதும், இளவரசன் எதற்காக  உயிரை விட்டான் என்பதும் ஊரரிந்த உண்மை. தயவு செய்து திவ்யாவை யாரும் பழி சொல்லி இன்னும் காதலை கேவலப்படுத்த வேண்டாம். சாதிதான் இந்த காதலுக்கு பலத்த எதிரியே அன்றி வேறு யாரும் காரணமல்ல. வற்புறுத்தி ”காதல் இல்லை” என மறுக்க சொல்லலாம்; காதல் தன்னை நிரூபிக்கிற மொழியும் வழியும் மிகக் கொடுமையானது. அதைத்தான் இளவரசன் மூலம் காதல் தன்னை நிரூபித்து காட்டியிருக்கிறது.


சாதிதான் இந்த காதலுக்கு பலத்த எதிரியே அன்றி வேறு எதுவும்  காரணமல்ல. இளவரசன் அச்சாதியில் பிறந்தது குற்றம், வளர்ந்தது குற்றம், படித்தது குற்றம், மனித பிறப்பின் அடிப்படை உணர்வான காதலை வெளிப்படுத்துவதும், திருமணம் முடிப்பதும் குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ளது போலும். சாதி வெறியர்களை பெற்றோராய், சுற்றமாய் அமையப்பெற்ற பெற்றோர் பெரும் குழந்தைகள் சாபக்கேடு பெற்றவர்கள். அச்சாபக்கேட்டின் விளைவாக அரங்கேறிய காதல் நாடகம்தான் இந்த தற்கொலை.



இளவரசன் காதலர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நல்லதொரு பாடத்தை தந்துவிட்டு சென்றிருக்கிறான். படித்து திருந்துவது நம் கடமை. வெறிகொண்ட மட்டும் இன்னும் இன்னும் எதிர்ப்போம் சாதியையும் அது சார்ந்த ஒட்டுண்ணிகளையும்.




தம்பி இளவரசனுக்கு வீரவணக்கம்.

4 comments:

  1. வெறிகொண்ட மட்டும் இன்னும் இன்னும் எதிர்ப்போம் சாதியையும் அது சார்ந்த ஒட்டுண்ணிகளையும்.
    >>
    மீண்டும் ஒரு புரட்சி வெடிக்கனும். அப்பா இறந்ததற்காக பிரிந்து சென்ற பெண், இப்போ காதலனையும் இழந்ததால் என்ன செய்வாளோ! விழிப்போடு அவளாஇ கவனிச்சுக்கனும்

    ReplyDelete
  2. சாதி வெறி பிடித்த தமிழ் சமூகத்தின் மற்றுமொரு துன்பியல் வடு, மனம் நோகின்றது. ஏண்டா இப்படி சாதி வெறிப் பிடித்த வாழ வேண்டியவர்களின் வாழ்வை சீரழிக்கின்றனரே ! :(

    ReplyDelete
  3. சாதியம் தன் கோர முகத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இங்கு சிக்கலே, சாதி மறுப்பாளர்களின் மவுனங்களும், கையாலாகாத்தனமுமே. தருமபுரி சம்பவம் நடந்த பின் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பை உறுதி செய்ய நாம் என்ன செய்தோம்? சாதி வெறியர்கள் மீது மட்டும் பழியைப் போடுவதன் மூலம் நமது குற்றவுணர்வை மறைக்க முனைவது முறையல்ல. இங்கு சாதி மறுப்பு பேசும் நாம், நமது வாழ்வில் சாதிகளை முற்றாக துறந்து தான் விட்டோமா? அல்லது குறைந்தது சாதி மறுத்து மணந்தோரின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் எத்தகைய உத்தரவாதங்களை எம்மால் அளிக்க முடிந்தது. இங்கு குற்றவாளிகள் தமது வெறித்தனத்தை பரப்பிக் கொண்டே உள்ளனர், அவர்களை நம்மால் ஒழிக்கத் தான் முடிந்ததா? அடுத்து இன்னொரு இளவரசன் இறக்கும் வரை, திவ்யா அபலையாக்கப் படும் வரை, வாய் மூடி மவுனிகளாக கிடப்போம், அல்லது எங்காவது புலம்பித் தீர்த்து விட்டு நாலாம் நாள் அவரவர் சோழியைப் பார்க்கப் போவோம். முடிவு???

    ReplyDelete
  4. நீங்கள் கூறியது நுற்றுக்கு நூறு உண்மை நண்பரே....

    ReplyDelete