Saturday 6 September 2014

புறவழிச்சாலை - 3

அன்றெல்லாம்
அடர் கானகத்தின் ஊடே
செல்லும் சாலை.
சில திசைகளில்
சிற்சில மரங்கள் சூழ்
பொட்டை வெளியிலும்.

நெடும் பயணங்களில்
இரு மணிக்கொருமுறை
நான் அருந்தும்
சாலையோர
தேநீர்கடை சூழ
கானகம் இல்லாவிடினும்
மரங்களாவது இருந்ததுண்டு.

தன்னந்தனியே
மகிழுந்தில் போவேன்.
தூக்கம் கவிழ்கையில்
சில நேரம்
மரங்களின் அடியில்
ஆக்சிஜன் சூழ
ஆசுவாசம் கொள்வேன்.

நேற்றுவரை...
சாலையோர மரங்கள்
வரவேற்பு வளைவுகள்.

இன்று...
தொலைதூரம்
பயணிக்கையில்
ஊருக்கு புறத்தே,
எங்கே செல்கிறோம்
என்பதறியாமல்
தனியே
பயணிக்கிறது
புறவழிச்சாலை.

பிரிதொரு மோட்டலை
தேடி நிற்கிறது
சில நேரம்.
அலறல் ரீமிக்ஸ்,
மூத்திர நாற்றம்,
வறண்ட தோசை,
கொள்ளை விலை.
சுற்றி பார்த்தால்,
மருந்துக்கும் இல்லை
ஆங்கே ஓர் மரம்.!

No comments:

Post a Comment