எத்தனை புதியது வானம்
பற்பலவாய் ஓவியங்கள்
கருப்பு மேகங்களில்
கதிரது பட்டு உமிழும்,
தங்க வண்ணங்கள்.
சிறு பிள்ளையின்
கிறுக்கல்கள் போல
வானம் முழுதும்
கிறுக்கல்கள்.
கூர்ந்து சூரியன்
பார்க்கையில்
கண்களுக்குள் – ஒரு
குறுகுறுப்பு.
அந்த கணமே
மழை பெய்தால்
நனையத்துடிக்கும்
மனவிருப்பு.
நீலம், மஞ்சள்,
சிவப்பு, நெருப்பு,
அத்தனை இருட்டு,
எத்தனை புதியது வானம்,
எத்தனை தொலைவதன் தூரம்.
மொட்டைமாடி தூக்கத்தில்
வானம் பர்க்கையில்
புள்ளிகள் மட்டுமே-
கோலமில்லாமல்....
நடுவே ஒரு
பெரிய தட்டு.
என் அம்மா
வெள்ளித்தட்டு ஒன்று
தொலைந்துவிட்ட்தாக
அடிக்கடி சொல்வாள்.
எனக்கு நிலவுதான்
நினைவுக்கு வரும்.
No comments:
Post a Comment