Thursday, 22 December 2011

எனது தெப்பக்குளம்


ஊர் தெப்பக்குளம்-

நடுவில் மண்டபமும்,
சுற்றி சிரு தெருக்களும்,
சமயத்தில் அதிக நீரோடும்,
சில நேரங்களில் வற்றிப்போய்.

காய்ந்து போனால் - நடந்தே
அம் மண்டபம் போவோம்.
தண்ணீர் இருந்தால்- நீந்தி
நடு மண்டபம் போவோம்.

மண்டபம் நடுவே கல் ஒன்று
கல்லாய் மட்டுமே இருந்தது..
எங்கள் ஊரில் அதற்கு-
சாமி என்று பெயர்.
எதையும் ஏற்றுக்கொள்ளும்,
எதையும் கொடுத்ததில்லை.

என் கடவுள் இல்லை பேச்சும்
நிறைய கடவுள்களின் மறுப்பும்,
அடிக்கடி நடக்கும் மண்டபத்தில்
அந்த கல்லின் பக்கத்தில்.
முடிவுகள் மட்டும்,
அவரவர் சுயத்தில்.

குளத்தை சுற்றி சுற்றி –என்
சிறு வயது சந்தோசங்கள்.
முடியவில்லை மறக்க –இன்னும்
மனதினுள் ஞாபகங்கள்.

தண்ணீர் நிறைந்தால் குளத்தில்
தற்கொலையும் நடக்கும்.

என் சிறு வயது சந்தோசங்கள்
இப்போது இல்லை..
அதுவும் கூட அதே குளத்தில்
தற்கொலை செய்து
கொண்டனவோ?

No comments:

Post a Comment