Saturday, 23 June 2012

பழையன கழித்தோம்-1980 to 2012

நமது எண்பது(80)களும்,
இப்போது,
நமதென்பதும்..
அசைபோடுகையில்
நாம்தான் கடைசியாய்....
நாம்தான் முதன்முதலாய்...

தெருக்களில் விளையாடிய
கடைசி சிறுவர்கள் நாம்.
வீடியோ கேம்ஸ் இயக்கிய
முதல் சிறுவர்களும் நாம்.

பள்ளிகளில் அடிவாங்கிய
கடைசி மாணாக்கர் நாம்.
இணையத்தில் பட்டம்பெற்ற
முதல் மாணாக்கரும் நாம்.

கருப்பு வெள்ளை டிவியை
கடைசியாய் பார்த்தோம் நாம்.
எல்.சி.டி வாங்கி மாட்டி
முதலாவதாக மகிழ்ந்தோம் நாம்.

வாடகை விசிஆர் வாங்கி
கடைசியாய் பார்த்தோம் நாம்.
ஆன்லைனில் பதிவிறக்கி
ரிலீசுக்கு முன் பார்ப்போம் நாம்.

தூர்தர்ஷன் ஒளியும் ஒலியும்
கடைசியாய் பார்த்தோம் நாம்.
சன் டிவியின் தமிழ் மாலை
முதன்முதலே பார்த்தோம் நாம்.

சைக்கிளில் பாட்டிவீடு
பலதூரம் ஓட்டினோம் நாம்.
பள்ளம் மேட்டில் விழாது
150சிசி-யில் பறந்தவர் நாம்.

போஸ்ட் பாக்சில் கைவிட்ட
கடைசி கைகள் நாம்.
இன்பாக்சில் கண்ணைவிட்ட
முதல் கண்களும் நாம்.

உள்நாட்டு அஞ்சல் மூலம்
ஊருக்கே எழுதினோம் நாம்.
மணவாழ்த்து குறுஞ்செய்தி
மனைவிக்கு அனுப்புவோம் நாம்.

செல்போன் இல்லாத
வாழ்வை ருசித்தோம் நாம்,
செல்போன் இல்லாமல்
வாழத்தெரியா மக்கள் நாம்.

ஊர்த்திருவிழாவிற்கு
அரசு பேருந்தில் ஓடியவர் நாம்..
பக்கத்து தியேட்டருக்கு
மகிழுந்தில் மகிழ்கிறோம் நாம்.

அசைபோடுகையில்
-நாம்தான் கடைசியாய்....
நிறைய ஈட்டினோம்.
-நாம்தான் முதன்முதலாய்...
நிறைய வாங்கினோம்.
-நாம்தான் கடைசியாய்....
நிறைய மகிழ்ந்தோம்.
-நாம்தான் முதன்முதலாய்...
நிறைய இழந்தோம்.

No comments:

Post a Comment