Sunday 23 June 2013

”ஞாயிறு போற்றுதும்”

நல்ல மட்டன் கால் கிலோ வாங்கி ஓரமா வச்சுகிட்டேன்.
பெரிய வெங்காயம், தக்காளிய நறுக்கி மிக்சியில அறைச்சுகிட்டேன்.
தேங்காய்+ சோம்பு or கசகசா -வையும் மிக்சியில அரைச்சுகிட்டேன்.
நல்லெண்ணய் நாலு ஸ்பூன், ஜோதிகாவ நினைச்சுகிட்டு வானளியில ஊத்துனேன்.

கொஞ்சம் புதினா, கறிவேப்பிலை, கடுகு, 2 முந்திரி, உப்பு போட்டு வதக்கினேன். கறிவேப்பிலை நிறம் மாறினதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் நாலு ஸ்பூன் + அரைச்சு வச்ச மேற்படி அயிட்டங்களயும் போட்டு மேலும் வதக்கினேன்.

ஒரு ஸ்மெல் அப்டியே என் மூக்குக்கு உள்ளார வந்ததா....தயிர் ஒரு அரை கப் அதுல ஊத்தி கலக்கினேன்.. மட்டன் மசாலா-வை இந்த கலைவையில மேலாப்புல தூவி ஒரு 2 நிமிடம் சூடுபடுத்தினா இன்னொரு ஸ்மெல் வந்தது.

மட்டனை அப்டியே இந்த கலவையில பொட்டு கலந்து ஒரு சூடு வந்ததும் 2 தமிழர்...மன்னிக்கவும்...2 டம்ளர் தண்ணிய விட்டு குக்கர்ல ஒரு 4 விசில் விட்டு எடுத்தேனா!.................
அப்புறம் கொஞ்சம் நல்லெண்ணய தாராலமா விட்டுட்டு வெயிட் பண்ணி............
மட்டன் கோல்டு கலருக்கும் ப்ரவுன் கலருக்கும் ரெட் கலருக்கும் சம்பந்தமில்லாத ஒரு கலருக்கு வரும்போது இப்பதான் எடுத்தேன்.

மேற்படி நான் செஞ்ச வேலைய எழுதி அதுக்கு ஒரு டைட்டில் வச்சேன்...”மட்டன் சுக்கா”-னு.
அவ சாப்பிட்டு பாத்துட்டு “ ஞாயிறு போற்றுதும்” - னா.

2 comments:

  1. நீங்க எங்கேயோ போய்'ட்டீங்க பாஸ் ! :)

    ReplyDelete
  2. நாக்குல எச்சி ஊறுது.., வர்ற ஞாயித்துக்கிழமை செஞ்சு பார்த்துடுறேன்

    ReplyDelete