Sunday 9 June 2013

பயிற்று மொழி



”அம்மா சூப்பர்! இனி எல்லாரும் இங்கிலீஷ்-ல பொளந்து கட்டுவாங்க” என்று அரசின் கட்டாய ஆங்கில அறிவிப்பிற்கு எதிர்வினையாற்றிய பீட்டர் & கோ.... இப்போ அதே அம்மா ”நான் அறிவிக்கல”-னு சொன்னத கேட்டு எச்சிய முழுங்குதுங்க.

இந்த கேடுகெட்ட சனங்களுக்கு ஆங்கில மொழிக்கும், பயிற்று மொழிக்கும் உள்ள வித்தியாசத்தை எந்த கல்வியாளராவது, ஆன்றோர் சான்றோராவது விளக்கினால் நலம்.

மொழியை,மொழியாக கற்றுகொடுத்தால் மட்டுமே அம்மொழிபேசுவதற்கும், எழுதுவதற்கும் வசப்படும். அதை விட்டுவிட்டு கணிதம், அறிவியல், பொறியியல் போன்ற அறிவை நாம் ஆங்கிலத்தில் புகட்டினால் அது ஆங்கில புலமையை கொண்டு வராது. அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் சொல்லிகொடுப்பதால் ஒரு மாணவன் நன்றாக இலக்கண சுத்தியோடு ஆங்கிலம் பேசிவிட மாட்டான்.

தமிழில் சோதனைக்குழாய் என்று சொல்லிம்பொழுது அது தன்னிச்சையாக பொருள் விளங்கும்படி உள்ளது. அப்பொருளின் வடிவம் நம் மணக்கன் முன் அழகாக தோன்றுகிறது. டெஸ்ட்யூப் என்று விளங்க வைக்க டெஸ்ட்ட்யூப் ஒன்றை கையிலெடுத்து காண்பித்தால் ஒழிய எளிதில் அது விளங்காது.

பிறிதொரு மொழி அவசியம் என்பதாலேயே மொழிப்பாடம் 1, மொழிப்பாடம் 2 என்று நம் விருப்பத்திற்கு ஏற்ப நம்மிடமே மொழி கற்க வழிமுறைகள் உள்ளது. ஆனால் பயிற்று மொழி என்பது பிற பாடங்கள் - கணிதம், பெளதிகம், இயற்பியல், உயிரியல் போன்ற அறிவுசார் பாடங்களை தாய்மொழி வழியில் கற்பதுதான் எளிமையானது, சிறந்தது. அது அவரவர் தாய்மொழி எதுவொ அதில் இருக்கலாம். தாய்மொழியில் கற்கிற வழியில்தான் சிந்தனைத்திறனும், கற்பனைவளமும் அதிகரிக்கும்.

கட்டாய இந்தியை விரட்டியதற்கான காரண காரியம் இதில்தான் பொதிந்து உள்ளது.

இதை சராசரி பெற்றோருக்கும், மாணவனுக்கும் இந்த அரசு விளங்க வைக்க ஏதுவாக என்ன திட்டங்களை வைத்துள்ளது எனத் தெரியவில்லை. ஆனால் நம் தாய்மொழியாம் தமிழுக்கு எதிராக சிந்திப்பதிலும், திட்டங்கள் தீட்டுவதில் மட்டும் அது மிகத்தீவிரமாக செயல்படிகிறது என்பது நன்றாக தெரிகிறது.

அப்படி அரசே கூட திருந்தினாலும் நம்ம சனங்கள் ..............
*ஜானி ஜானி எஸ் பாப்பா பாடிட்டா உடனே ஜார்ஜ் புஷ் அவர் நாட்டுக்கு உடனே அழைச்சுட்டு போய் வேலை கொடுத்துடுவாருன்னு இஙிலீஷ்-ஐ அரை குரையாய் படிக்க வைக்குது...
கூடவே

*தம் பிள்ளையை பானி பூரி விக்க இங்கன இருந்து இந்தி படிச்சுட்டு போய்தான் விக்கனும்-னு கங்கனம் கட்டிகிட்டு இந்தியை படிக்க வைக்குதுக..

//மொழி என்பது தெளிவாக தொடர்பு கொள்ளவும், சுலபமாக அறிவைக்கற்கவும் ஒரு கருவியே ஒழிய, அதுவே அறிவல்ல//

No comments:

Post a Comment