Thursday, 18 July 2013

இயற்கை வாலியை தத்தெடுத்து கொண்டது

எதுகையும் மோனையும் அரம்பை ஊர்வசியாக அவர் படைப்பில் விளையாடும். பக்திரசமும் பரவும், காமரசமும் பெருகும் கடல் அலைகள் இவர் வரிகள்.

அப்பாடலில் நடிக்கிற நடிகனை பார்த்து கண்டுபிடித்துதான்..........
”ச்ச!பழைய பாட்டுய்யா” என்று சலித்துகொள்ளும் கூட்டம்.
மற்றபடி வாலியின் வரிகள் யாருக்கும் எழுதும். சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, ஆர்யா, என எல்லோர்க்கும் பொருந்தும் பாடல்களை எழுதுவதினால்தான் அவர் ’வாலிப’ பட்டத்துக்கு சொந்தக்காரர் ஆனார்.

எம்ஜிஆர்-ஐ கருத்தியலாக, ’இசம்’ - ஆக மாற்றியதில் வாலியின் பங்கு மிக முக்கியமானது. வாலி இல்லையேல் எம்.ஜிஆர் இல்லை.
’அன்பே வா’ படத்தில் ”உதய சூரியனை பார்க்கையிலே, உலகம் விழித்துகொண்ட வேளையிலே” என்றுதான் முதலில் எழுதினார். அப்போது திமுகவில் இருந்த எம்.ஜி.ஆர் ”எதுக்குய்யா..வம்பு.இந்த வார்த்தைய எடுத்துருய்யா” என பயந்து நெருக்கடி கொடுக்க..


”சரி! புதிய சூரியன்னு போட்டுக்குவோம்” என்று சொல்ல, படத்தில் அப்பாடல் வரிகள் வருகையில் “உதய சூரியன்” என்று ஒலிப்பது போலவே இருக்க, எம்ஜிஆர் “ஞே”-வென விழித்தாராம்.

இவரின் பாண்டவர் பூமியும், அவதார புருஷனும் நாத்திகரும் சுவைக்கிற தேனில் ஊரிய பலாச்சுளைகள்.
திமுக-தான் தன்னை வளர்த்தது என்று பெருமிதம் கொண்டு சொன்னவர் வாலி. கலைஞர்பால் பற்றுகொண்ட பண்பாளர்.

 இவரை சினிமாவிற்கு அழைத்துவந்த TMS எவ்வாறு இரவாது குரலொலியாய் வாழ்கிறாரோ, அதுபோல இவர் பதித்த வைர வரிகளால் இவர் வாழ்வாங்கு வாழ்வார்.

’இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ -இவர் எழுதிய இந்த வரிகள் இவருக்கே சமர்ப்பனம்.

No comments:

Post a Comment