ராஜாவும், மோகனாவும் பொறியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்கள். இருவரும் நல்ல
நண்பர்கள். படிப்பாளிகள். இருவரும் தங்கள் கல்லூரி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லியில் நடக்கிற ஐடி நிறுவனங்கள் பங்கு கொள்ளும் தொழில்நுட்ப
கண்காட்சியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அங்கு சென்று பல நிறுவனங்களை சேர்ந்த
மேலதிகாரிகளை சந்தித்து தங்கள் கல்லூரிக்கு வளாக நேர்முகத் தேர்விற்கு வருமாரு
அழைப்பு விடுத்தனர். சில சிறிய நிறுவனங்கள் ஒத்துகொண்டன. புது
நிறுவனங்கள்தான் என்றாலும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தருவதால் அவர்களை இருவரும் வருமாறு அழைத்தனர்.
அந்த கண்காட்சியில் மலிவு விலையில் பொருட்கள் விற்கப்பட்டன. குறைந்த விலையில் பென்டிரைவ் ஒன்றும் விற்கப்படுகிறது. விலை 2GB ரூ.100 மட்டுமே! ராஜாவும், மோகனாவும் அதை மொத்தமாக வாங்கி தங்கள் உடன் படிக்கும் நண்பர்களுக்கு தரலாம் என்று திட்டமிட்டு வாங்குகின்றனர்.
ஊர் திரும்பி கல்லூரிக்கு வந்து ராஜாவும் திவ்யாவும் அனைவருக்கும் லாபம் ஏதும் வைக்காது ஆளுக்கொரு பென்டிரைவ் தருகின்றனர். உள்ளபடியே நண்பர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. எல்லோரும் ராஜாவையும், மோகனாவையும் பாராட்டுகின்றனர்.

தகவல் தீயாய் பரவுகிறது. கல்லூரிக்கு வழக்கமாக லேப்டாப், சிடி, IT பொருட்களை
அதிக விலைக்கு சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு இந்த தகவல் கசிய குறைந்த விலைக்கு விற்ற ராஜா மேல்
குற்றச்சாட்டுகளை சாட்டுகிறது அந்நிறுவனம்.
தரமற்ற கம்பெனிகளை வளாக நேர்முகத் தேர்விற்கு
அழைப்பு விடுத்தது உள்நோக்கம் கொண்டது எனவும், அதன் மூலம் அவர்கள் கம்பெனி
தயாரிப்புகளை விற்பனை செய்து தர ராஜா ஒப்புகொண்டுள்ளான் எனவும் கல்லூரி கணக்காளரை வைத்து
குற்றம் சுமத்தினர். கணக்காளரை வழக்கமாய் கவனிக்கும் கம்பெனிகளைப் போல் ராஜாவும் மோகனாவும் செய்யவில்லை.
இது பெரும் பிரச்சினையாக உருவாவதை அறிந்த மோகனா
தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, ராஜாதான் பொறுப்பு என ஒதுங்கி கொண்டாள்.
ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை..
”வேலை வாய்ப்பு தரும் புதிய கமபெனிகளை வளாக நேர்முகத் தேர்விற்கு அழைத்தது தவறா?”
”விலை மலிவான பெண்டிரைவ்-ஐ நண்பர்களுக்கு வாங்கி கொடுத்தது தவறா?”
கல்லூரிக்கு இதில் என்ன நட்டம்.?.கல்லூரிக்கு இதுவரை சப்ளை செய்யும் நிறுவனம் இதற்குமுன் குறைந்த விலைக்கு சப்ளை செய்யாதது ஏன் ? என நிறுவனத்தையும்,கணக்காளரையும் கேள்வி கேட்காது , நான் வாங்கி கொடுத்ததனால்
கல்லூரிக்கு இழப்பெனில் எனக்கென்ன இதில் லாபம். இதில் நான் என்ன வருமானம்
ஈட்டினேன்?”
.....என்றெல்லாம் யோசித்து தன் மேல் நல்லெண்ணம் ஏற்படும் வரையில்
கல்லூரிக்கு செல்வதில்லை என முடிவெடுத்தான்.
100 ரூபாய்க்கு வாங்கிய பெண்டிரைவ்-ஐ 170க்கு விற்றால் லாபம்தான். ஆனால் ராஜா வியாபாரி இல்லையே? அந்த எண்ணமும் அவனுக்கு இல்லையே?
100 ரூபாய்க்கு வாங்கிய பெண்டிரைவ்ஐ 100 ரூபாய்க்கே விற்று
கல்லூரி நிர்வாகத்தின் விலை 170க்கு விற்காதது கல்லூரிக்கு ஒரு மாயையான
இழப்பே அன்றி அதில் ஊழலோ? ராஜா கையூட்டு பெற்றான் என்றோ எப்படி சொல்வது?
இதில் கொடுமையானது என்னவெனில் குறைந்த விலைக்கு பெண்டிரைவ்
வாங்கிகொண்ட யாரும் வாயே திறக்கவில்லை என்பதுதான். சிலர் ராஜாவை சந்தேகமும்
கொண்டனர்.
மோகனா எப்படி ஒதுங்கிகொண்டாள் என்பதே என்னை போன்றவர்களின்
கேள்வி..'இந்த பொம்பளைங்களே,இப்படித்தான் எசமான்' என்ற டயலாக்தான்
நினைவுக்கு வந்தது..
ராஜாவும் தன் நிலையை விளக்க பலமுறை தேதி கேட்டும் அறிவாளிகள்
இன்னும் அவனை அழைத்தபாடில்லை.. குற்றம் சாட்டியே வைத்திருப்பின் அவர்
குற்றவாளியாகவே இச்சமூகத்தால் கருதப்படுவார், நாம் குளிர் காயலாம் என
கல்லூரிக்கு சப்ளை செய்யும் நிறுவனம் போட்ட முட்டுக்க்ட்டை யுக்தி இது.
ஆக! ராஜா இன்னும், இப்போதும் "2GB பெண்டிரைவ் குற்றவாளி"
.....
கதை மாந்தர்கள்:
ராஜா - மேனாள் முன்னாள் அமைச்சர் ஆ. இராசா.
மோகனா- மேனாள் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்.
சப்ளை நிறுவனம்- ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா, ஐடியா, ஏர்செல், வோடாபோன்.
கணக்காளர் - மத்திய கணக்காயம் (CAG)
நண்பர்கள்- வேற யாரு?நாமதான்.
No comments:
Post a Comment