Saturday 3 October 2015

கயல்

வட்டார வழக்கற்ற யதார்த்த படம் எடுத்து என்ன சுவாரசியம இருக்கிறது? ஆரல்வாய்மொழியில் எப்படி மதுரை வழக்கு பேசும் மனிதன் பூர்வீக ஜமீனாக இருப்பான்? நாஞ்சில் வழக்கு சுத்தமாக இல்லை.

இசையமைப்பாளர் இமான் பேசும்பொழுது "பிரபு சாலமன் சார் பேசுற மாதிரிதான் song lyricsம் இருக்கனும்பாரு, அவ்வளவு இயல்பா வரனும்னு எதிர்பார்ப்பாரு" எனச் சொன்னார். பாட்டே யதார்த்தம் இல்லைதான். 'என் ஆள பாக்கப் போறேன்'னு ஒரு பாட்டு, கவித்துவமில்லாமல். இமானின் 'அய்யய்யோ' அப்பப்போ ஞாபகம் வருகிறது.

வழக்கமான cleache-க்களில் போலீஸ், காதலன் காதலி பிரிவாற்றாமை, மலைப்பிரதேசம், இமானின் இழுவையும் பேஸும் நிறைந்த இசை, மேக்கப் இல்லாத ஹீரோயின், தாடி ஹீரோ, பயணம், கொடூர வில்லன்கள் என நீள்கிறது பட்டியல்.

ஆனாலும் 'கயல்' அந்த சுனாமிக் காட்சிக்கும் போலீஸ் கிண்டல்களுக்கும் ஓடும்.

2 comments:

  1. Whatever you said is correct but...Why now?????

    ReplyDelete
  2. இரண்டாவது தடவை டிவியில பாத்தேன்..அதான்.

    ReplyDelete