Monday 3 April 2017

கவிதை எப்டிப்பா எழுதறது?

"ப்பா! கவிதை எப்படிப்பா எழுதனும்.தமிழம்மா எழுதிட்டு வரச்சொன்னாங்க!?"

"சொல்றேன். மழை எப்படி பெய்யும்னு நீ சொல்லு?"

"மேகத்துல இருந்து பெய்யும்."

"அப்புறம்..?"

"ஹைட்டா இருக்குற மரத்துல அந்த துளி விழும்."

"அப்புறம்..?"

"இலையில விழுந்து, கீழ சிந்தும்."

"அப்புறம்...?"

"புல்லு மேல நிக்கும்."

"தரையில விழுந்திடும். அப்புறம் எவாபரேட் ஆகும்.அவ்ளோதான்."

"இப்ப நான் கவிதை சொல்றேன்.கேளு....."

'மேகம் சிந்திய துளி,
மரக்கிளை ஏந்தியது,
தேகம் வழிந்து ஓடி,
இலைநுனி அதனை மீட்டது...

விழுந்த அம்மழைத் துளி,
புல் மேல் அமர்ந்தது,
தாகம் கொண்ட பூமி,
அத்துளியினை கொஞ்சம் குடித்தது.

எஞ்சிய ஒரு சிறுதுளி,
சூரியனை பார்த்து இளித்தது,
முறைவைத்த மேகமோ?
மீண்டும் துளியை பெற்றது.

அன்பை போன்றதத்துளி-மேகம்
கொடுத்து கொடுத்து பெற்றது.
நீயும் அள்ளிக் கொடுத்திடு-உன்
அன்பால் இவ்வுலகை வென்றிடு'


..சொல்றத டான்ஸ் ஆடிகிட்டே சொல்லனும்.
அதான் தம்பி கவிதை. சிம்பிள்.

#உலக_கவிதை_தினம் 2017

No comments:

Post a Comment