Monday 3 April 2017

அறிவுத்திருட்டு

இந்த ஊருல அறிவுத் திருட்டுக்கு அளவே கிடையாது. கூலி வேலைக்கு கூட முட்டிய உசத்தி கேட்டிடலாம். எழுத்து, இசை, குரல் மாதிரியான அறிவுத்திறனுக்கு மதிப்பும் மரியாதையும் சுத்தமா இல்லை.

முன்னாடியெல்லாம் நாம் எழுதறத பத்திரிக்கைக்காரன் லேசுல போடமாட்டான். கூப்பிட்டு கேட்டா "முதல்ல letter to editor எழுதி பழகிக்கோங்க தம்பி"னு திமிரா பதில் வரும். ஆனா நாம எழுதுனதை டிங்கரிங் பாத்து எங்கோ வேற ஒரு பத்திரிக்கையில வெளிவரும். நாம கேட்கவே முடியாது.

மெனக்கெட்டு நாலுவரி எழுதுன கவிதைய விரும்பி தேர்ந்தெடுத்து போடற பத்திரிக்கைகாரன் வெறும் நாலு வரிதானேன்னு வரிவிளம்பர வருமானத்தைக் கூட அந்த கவிதைய எழுதுனவனுக்கு கொடுக்குறதில்லை. இதுவரை கொடுத்ததில்லை.பத்து பேர் கவிதைய பிரசுரம் பண்ணிட்டு ஒத்த கவிதைக்கு பரிசு தருவான் ஒரு பொழைக்க தெரிஞ்ச பத்திரிக்கை.

ஆனா இப்போ! இணையத்தை வசமாக்கின அந்த ஒதுக்கப்பட்ட எழுத்தாளன் எழுதினத ரெண்டு பக்கம் ஒதுக்கி இங்க இருந்து காபி பண்ணி நெப்பிக்கிறான் பத்திரிக்கையில. இதே கதைதான் எல்லா தளங்களிலும். மிமிக்ரி கான்செப்டை காபி பண்றது, மைம், நாடகம், ஸ்கிட், நடனம், ரியாலிட்டி நிகழ்வுகள்னு எல்லாம் காப்பிதான். ஆனா அதை உருவாக்குனவனுக்கு ஒரு பலனும் போய் சேர்றது இல்லை.

முன்னாடியெல்லாம் unofficial-ஆ எதையோ யாருக்கோ எதையோ எழுதி கொடுக்க அது வேற எங்கேயோ பிரசுரமாகும்.சினிமாவா கூட வரும். ரயில்ல எவனோ சொன்னதுன்னு போட்டுக்குவாய்ங்க. எழுதுனவன் ஏமாந்த சோனகிரியா தாடி வச்சுகிட்டு, சிங்கிள் டீக்கு பிச்சையெடுத்துகிட்டு திரிவான்.
பிற்பாடு இவனும் முட்டி மோதி முன்னுக்கு வந்து பிரபலமாகி ஏதாவது பண்ணுனா அதையும் திருட்டுத்தனமா வியாபாரமாக்குறது எவ்ளோ அயோக்கியத்தனம்.? இப்பதான் எழுத்தாளன் மாதிரி ஆட்களுக்கு வேலைவாய்ப்பு தளங்களே (job sites) உருவாகியிருக்கு. கொஞ்சமாவது professionalism கண்ணுக்கு தெரியுது.

இப்ப நம்ம இசைஞாநி பிரச்சனைக்கு வருவோம். 80கள்ல இதே இளையராஜாகிட்ட ஒரு கம்பெனி(பேர் வேண்டாம்) போய் "உங்க சினிமா மற்றும் தனிப்பாடல்களை ஆல்பமா போட்டா நல்லாருக்கும்.மக்கள் விரும்பி கேப்பாங்கனு(விக்கும்னு சொலலை)" சொல்லி சல்லிக்காசு கொடுக்காம(இவரு வேண்டாம்னுட்டாராம்) கேசட் போட்டு வித்திருக்கு. இப்ப வரைக்கும் வித்திட்டு இருந்துருக்கு. கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி இப்பதான் விளிச்சுகிட்டாரு இசைஞாநி. அது கூட முறையா அணுமதி கேட்டு பண்ணது.
 இன்னைக்கு வர்ற சீரியல்களை உத்துப் பாருங்க..சாரி கேளுங்க. சகட்டுமேனிக்கு அவரோட பின்னணி இசையை(BG score) பயன் படுத்தியிருப்பாங்க. இது திருட்டு இல்லையா? இத இளையராஜா நேரடியா போய் கேட்க முடியுமா?. கேட்டாலும் தப்பில்ல. அதான் இவரு வக்கீல்கள் ஏஜன்சி மூலமா கண்காணிச்சு இப்போ கேட்கிறாரு. முறையா சொல்லிட்டு செய்றதுதானே அழகு. Monetary benefit அப்புறம். அனுமதிதானே முக்கியம்.

இதுமாதிரி காப்பிரைட் சம்பந்தமா இளையராஜா இப்பல்லாம் இவ்வாறெல்லாம் முன்னெடுக்குறாருனு SPB தரப்புக்கு தெரியாதா? தெரியலைனாலும் "உன் ஆபீஸ்ல இருந்து நோட்டீஸ் வந்துருக்கு டா! நான் கொடுக்க முடியாதுடா! என் கிட்டயே கேப்பியா"-னு SPB இளையராஜாகிட்ட கேட்டிருக்க முடியாதா? சரண் நேரடியா ஏன் பத்திரிக்கைக்கு பேட்டி தரணும்.? பொதுவுல ஏன் விவாதிக்கனும்.? சரி! அது அவங்க தனிப்பட்டது. அவங்களுக்குத்தான் வெளிச்சம்.

ஆனாலும் இந்த காப்பிரைட், உரிமைப் பிரச்சனை எல்லாம் வளரும் கலைஞனுக்கு மட்டுமில்லை, இவ்ளோ பெரிய பிரபலத்துக்கும் வரும் என்பதுதான் ஒழுங்கற்ற, நேர்மையற்ற இந்திய சமூகம் நமக்கு சொல்லிக்கொடுப்பது.

இன்று இதை இளையராஜா செய்துவிட்டபடியால் இனி அனைவரும் இதே மாதிரி கேட்கலாம். SPBயும் தன் குரலுக்கு காப்பிரைட் கேட்கலாம். இளையாராஜாவிடம் வாசிக்கும் வயலின் கலைஞர் (ஒவ்வொரு வயலினிஸ்டுக்கு தனி வாசிப்புண்டு) உரிமை கோரலாம் அல்லது இந்த பிரச்சனை இத்தோடு அமுங்கியும் போகலாம். இளையராஜாவே SPBயை தொடர்பு கொண்டு "பாடிக்கோ நண்பா"-னு சொல்லிடலாம்.

எதுவாயினும்...இப்ப இளையராஜா செஞ்சது சரிதான்.

No comments:

Post a Comment