Thursday, 12 July 2012

மின்சார கனவு



முன்னொரு காலத்தில்
என் சீயானுக்கு சீயான்
சீமையெண்ணை வடிவதாக
கம்பத்தின் மீதேறி
மின்சாரம் பாயும் கம்பியை
கத்தியால் அறுக்க
மின்சாரம் பாய்ந்து
இறந்தே போனான்.

பல வருட காலம்
பயிர்தனை விழைக்க - வயலில்
உயிர்தனை கொடுத்த
இல்லாத விவசாயிக்கு
இலவசமாய் மின்சாரம்
தந்ததோர் அரசும்
மரித்து போய்
வருடம் ஒன்றானது.

நடுநிசியில் தாகம் எடுக்க
பேய்க்கும், இருட்டுக்கும் பயந்து
கண்களை மூடியே
அடுப்படி சென்று
மின் விளக்கு அழுத்தும்
என் நண்பனின் சகோதரி
மின்சாரம் அடித்து
இறந்தே போனாள்..


இன்றைய கணக்கில்
கண்ணுக்கு தெரியா மின்சாரத்தை
மின் அட்டையில்
பார்க்கையிலும்,
மின்தடை நேரத்தினில்
காற்றாடியில் தேடுவதிலும்,
நம்மில் பலபேர்
செத்து செத்து பிழைக்கிறார்கள்.

1 comment:

  1. அருமை தோழர் பிரபு.

    ReplyDelete